Technology

200 கோடி பயனாளர்களை கடந்த ஃபேஸ்புக்; உலகின் நம்பர் ஒன் சோஷியல் மீடியா…!

ஃபேஸ்புக் 200 கோடி பயனாளர்களை கடந்து, சாதனை படைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவை இல்லாமல் வாழ இயலாது என்று கூறும் அளவிற்கு வாழ்க்கை முறை சென்று கொண்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கிய பங்காற்றுவது ஃபேஸ்புக். இது உலகம் முழுவதும் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 200 கோடியைத் தொட்டு விட்டதாக, அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை, சுமார் 194 கோடி பேர் பயன்படுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் உலகை இணைப்பதில் ஃபேஸ்புக் தொடர்ந்து முன்னேறி வருவதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டை விட, 17% அதிக வளர்ச்சி பெற்றுள்ளதை சுட்டிக் காட்டினார். ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிப்பதே தங்களது நடவடிக்கை என்று அவர் கூறினார்.