Technology

வாட்ஸ் அப் ஜூன் 30 முதல் செயல்படாது!

தினசரி குறுந்தகவல், புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ ஆகியவற்றை அனுப்ப பயன்படுத்தப்படும் உலகின் முக்கிய அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் உள்ளது. இந்த வாட்ஸ் அப் அவரும் ஜூன் 30 முதல் சில மொபைல்போன்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் செயல்படாது:
கடந்த 2016ல் வெளிவந்த குறிப்பிட்ட மொபைல்களான பிளாக்பெரி, விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஆப்பிள் உள்ளிட்ட சில ஸ்மார்ட் போன்களில் மிகப்பழைய ஓ.எஸ் பயன்படுத்தப்படுகின்றது.

இது போன்ற மொபைல்களில் ஜூன் 30ம் தேதிக்கு பின் எங்களால் வாட்ஸ் அப் சேவை அளிக்க முடியாது என தெரிவித்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.

சேவை துண்டிக்கப்பட்டும் மொபைல்கள்:

பிளாக் பெர்ரி, பிளாக் பெர்ரி 10
நோக்கியா S40
நோக்கியா Symbian S60,
ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2
விண்டோஸ் 7.1 மொபைல்
ஐபோன் 3 3GS/iOS 6