நெதர்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த சைக்கிள் மீது அமர்ந்து போஸ் கொடுத்துள்ள மோடியின் புகைப்படம் சமூகவலைத்தங்களில் வைரலாகி வருகின்றது.
பிரதமர் மோடி 2 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நெதர்லாந்து சென்றார். அங்கு சென்ற மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டை சந்தித்துப் பேசினார். இதில் சமூக பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் நீர் சம்பந்தமான 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
சுற்றுச் சூழலுக்கு மிகவும் பெயர்பெற்ற நெதர்லாந்து. அதனால் அங்கு பலரும் காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வண்ணம் சைக்கிளில் பயணம் செய்வது வழக்கம். அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டும் அதே போல சைக்கிளில் தான் அலுவலகத்துக்கு செல்வது வழக்கம்.
இதன் காரணமாக அந்நாட்டுக்கு சென்றுள்ள நம் பிரதமர் மோடிக்கு, மார்க் ரூட், சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்தார். அந்த சைக்கிளில் மோடி அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலதளங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.