political

டுவிட்டரில் பெங்களூரு வாலிபரை பின்தொடரும் மோடி

 பெங்களூரு:

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் பிரதமர் மோடியை உலகம் முழுவதிலும் உள்ள 28.7 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ஆனால் மோடி 1700 பேரை மட்டுமே பின்தொடர்கிறார்.

அதில் பெங்களூரு இளைஞர் ஆகாஷ்ஜெயின் என்பவரை மோடி பின்தொடர்கிறார். இதற்கு காரணம் ஆகாஷ்ஜெயினின் நடவடிக்கைதான் காரணம்.

ஆகாஷ்ஜெயினின் தந்தை தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்தார். இந்த திருமண பத்திரிக்கையில் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் லோகோவை அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினார்.

இந்த திருமண பத்திரிகையை ஆகாஷ் தனது டுவிட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார். இதைப்பார்த்த மோடி ரீ டுவிட் செய்து ஆகாஷின் கருத்துகளுக்கு பதிலளிக்க தொடங்கினார்.

இதைப்பார்த்த பாரதிய ஜனதா கட்சியினர் ஆகாஷை பின்தொடர ஆரம்பித்து விட்டார்கள். தற்போது ஆகாஷ் டுவிட்டரில் பிரபலமாகி விட்டார்.

எனது சகோதரி திருமண பத்திரிகையில் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்ட லோகோவை எனது தந்தை அச்சடித்து இருந்தார். அதை நான் பிரதமருக்கு அனுப்பி இருந்தேன். அதை அவர் ரீ-டுவிட் செய்ததுடன் எனக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். உலகில் அதிகமானவர்கள் பின்தொடரும் ஒருவர் (பிரதமர் மோடி) என்னைப் பின்தொடர்வது நான் கனவில் கூட நினைத்துப் பார்க்காத வி‌ஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.