சென்னையின் அடையாளமாய் திகழும் மீனம்பாக்கம் விமான நிலையம் இப்பொது அனைவரையும் தன்பால் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனுடைய சிறப்பால் அல்ல ..
சென்னை விமான நிலையத்தின் 7-வது நுழைவுவாயிலின் மேற்கூரையில் கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இது சென்னை விமான நிலையத்தில் காண்ணாடி விழுந்து 42-வது முறையாக நடக்கும் விபத்தாகும்.
சென்னை விமான நிலையத்தில் மேற்கூரைகள், கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள் மற்றும் கிரானைட் கற்கள் உடைந்து விழுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் சென்னை விமான நிலையத்துக்குள் வரும் பயணிகள் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை விமான நிலையத்தில் கண்ணாடி ஒன்று திடீரென்று உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது. 42-வது முறையாக நடத்த விபத்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படியே போனால் விமான பயணம் போகும் போது கையில் தலைகவசம் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் என சொல்லி சிரிக்க வேண்டி இருக்கிறது சென்னை விமான நிலையத்தின் பரிதாப நிலைமையை பார்த்து…