News World தற்போதைய செய்தி தலைப்பு செய்திகள்

சிரியா வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு: மனித உரிமைகள் அமைப்பு தகவல்

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பெய்ரூட்:
சிரியாவில் வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உயிழந்தவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 15-ஆக இருந்த பலி எண்ணிக்கை, மூன்று பேர் தீவிர காயங்களுடன் உயிரிழந்ததை தொடர்ந்து எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு மனித உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியா அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரஷ்ய விமானங்கள் தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. சிரியா முழுக்க தகவல் சேகரிப்பாளர்களை வைத்துள்ள மனித உரிமைகள் அமைப்பு பல்வேறு காரணிகளை கொண்டு சேகரித்த தகவல்களை உறுதி செய்து வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். இதில் 31 குழந்தைகளும் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது அமெரிக்கா பயங்கரமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் விமானப்படை தளம் மிக மோசமாக சேதமடைந்தது.