Technology

ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூலம் மின்சாரம் எடுக்க முடிவு!

ஷீரடி : ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாத அழுத்ததை வைத்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஷீரடி சாய்பாபா கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

சாய்பாபாவின் உயிர், 15அக்டோபர் 1918 அன்று இந்த பூ உலகைவிட்டு உயிர் பிரிந்தது. அடுத்தாண்டு ஷீரடி சாய்பாபா மறைந்து 100 ஆண்டுகளாக உள்ளது. இதனால் அடுத்தாண்டு பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 50,000 பக்தர்கள் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு தரிசிக்க வருகின்றனர்.

இதன் காரணமாக இக்கோயிலுக்கு, ஆண்டு தோறும் பல கோடி உண்டியல் காணிக்கை கிடைக்கின்றது. இதை பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த வகையில், இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாத அழுத்தத்தை வைத்து அதிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோயிலில் உள்ள படிகட்டுகளில் பக்தர்கள் ஏறும் போது அழுத்தமாக ஏறுவார்கள், அந்த படிகட்டுகளில் ஏற்படும், அழுத்தம் மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனத்தை பொருத்த திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் கோயிலின் விளக்குகள், மின்விசிறி ஆகியவற்றிற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.