Life Tips

ஆண்கள் வயதில் மூத்த பெண்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்வதற்கான 6 காரணங்கள்!

பொதுவாகவே ஆண்களுக்கு வயது அதிகமான பெண்கள் மீது ஆசை அதிகம் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளன.

முன்னர் திருமணம் என்றால் ஆண், பெண் மத்தியில் வயது வித்தியாசம் குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளாவது இருக்கும். இதன் பின்னணியில் சில காரணங்களும் இருந்தன. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இருவர் மத்தியிலும் சமநிலை இருக்க வேண்டும் என்பதற்காக தான் வயது வித்தியாசத்தை ஏற்படுத்தி வைத்திருந்தனர். ஆனால், இன்று ஒரே வயது என்பதை தாண்டி, வயது வித்தியாசம் தலைகீழாக மாறி திருமணம் செய்யும் வழக்கமும் பெருக ஆரம்பித்துவிட்டது. இளம் ஆண்கள், வயது அதிகமான பெண்களை விரும்புவதற்கு சில காரணங்களும் கூறுகின்றனர். அதை பற்றி இங்கு காணலாம்…

மரியாதை!

வயது அதிகமான பெண்கள் மதிப்பும், மரியாதையும் அளித்து பழகும் குணாதிசயங்கள் கொண்டிருப்பர். இதனால், அவர்களால் குடும்பத்தில் அதிகம் சண்டை எழாது. இதனால் குடும்பத்தின் வலிமை கூடும்.

பொறுப்பு!

எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதன் மதிப்பு மற்றும் அதனால் பின்னாளில் ஏற்படும் விளைவுகளை அறிந்து செயல்படுவார்கள். மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருப்தி! தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது முழுமையாக திருப்தி படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார்கள். தவறுகள் செய்தாலும் திருத்துவார்கள்.

கருணை!

கருணை உள்ளம் ஒரு நபரின் மதிப்பை அதிகரிக்கும். சமூக உறவிலும், இல்லறத்திலும் சிறந்து விளங்க செய்யும்.

புத்திசாலித்தனம்!

சும்மா வெட்டிப்பேச்சாக அல்லாமல், இவர்களுடனான உரையாடல்கள் புத்திசாலித்தனமாகவும், அறிவு திறனை மிகுந்ததாகவும். பல வகையில் உதவும் வகையிலும் அமையும்.

வயது என்ன வயது! வயது என்பதை தாண்டி, நாம் திருமணம் செய்துக் கொள்ள போகும் நபர், நமக்கு பிடித்த நபராக இருக்க வேண்டும். நம்மை நன்றாக பார்த்துக் கொள்ளும் நபராக, நம்மை விரும்பும் நபராக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.