Flash News

பெட்ரோல்,டீசல் விலை அதிரடி உயர்வு,,,மக்கள் அதிருப்தி

பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.3.96-யாகவும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2.37-யாகவும் விலையை உயர்த்தியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இரண்டு முறை விலை குறைப்பிற்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசலின் விலை திடீரென அதிகளவு உயர்ந்திருப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதிய விலை உயர்வின்படி, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.63.16 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு ரூ.49.57 காசுகளாகவும் விற்கப்படும்.

விலை உயர்வு பற்றி பொதுத்துறை நிறுவனமான ஐ.ஓ.சி. கூறுகையில், சர்வதேச விலை நிலவரங்களின் காரணங்கள் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் நகர்வுகளை பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது