political

பெல்லட் குண்டுக்கு பதில் ரப்பர் குண்டு! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

காஷ்மீரில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்த பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக ரப்பர் குண்டுகளை பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக வேறு வழிமுறைகளை பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து , மத்திய அரசு ரப்பர் குண்டுகளை பயன்படுத்தவுள்ளது.

 

காஷ்மீரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடுவோர் கல்லெறி தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். அவர்களை கலைந்து போகச் செய்ய பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி வந்தனர் மத்தியப் படையினர். பெல்லட் குண்டு தாக்குதலால் அப்பாவி மக்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். பலருக்கு பார்வை இழக்கும் அபாயமும் நேரிட்டது. இதையடுத்து, பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக மாற்று வழிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்க  வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து மத்திய அரசு இன்று தாக்கல் செய்த அறிக்கையில், பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. பெல்லட் குண்டுகளை தேவை ஏற்படும்பொது மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவும் இடுப்புக்கு கீழ்தான் சுடவேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.