Science

விரைவில் ஸ்மார்ட் போனில் ஹோலோகிராம் தொழில்நுட்பம்

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முப்பரிமாண முறையில் நிஜம் போன்று தோற்றுவிக்கும் தொழில்நுட்பமே ஹோலோகிராம் ஆகும்.

இத் தொழில்நுட்பமானது விரைவில் ஸ்மார்ட் போன்களில் தரப்படவுள்ளது.

அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டின் அதுவே உலகின் மிகவும் சிறிய ஹோலோகிராம் காட்சியாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஹோலோகிராம் மற்றீரியலை விஞ்ஞானிகள் உருவாக்கியவருகின்றனர்.

இந்த மற்றீரியல் ஆனது தலை முடி ஒன்றினை விடவும் 1,000 மடங்கு சிறியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளே இதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இத் தொழில்நுட்பத்தினை ஸ்மார்ட் கைப்பேசிகளில் மட்டுமன்றி கணனித் திரைகள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் பயன்படுத்த முடியும்.