முதுமையில் வரும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
தொற்று அல்லாத நோய்கள் : நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடற்பருமன், மூட்டுவலி, பக்கவாதம் மற்றும் மறதி நோய்.
தொற்று நோய்கள் : நிமோனியா, காசநோய், சிறுநீர் தாரையில் பூச்சி, வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகள்.
வயது ஆக ஆக நோய்களை ஏதிர்க்கும் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலில் குறைகிறது. முதுமை நோயை ஏதிர்த்துச் செயல்படும், வெள்ளை ஆணுக்கள் மற்றும் பல செல்களின் செயல் திறன் குறைகிறது. நோய்களுக்கு ஏடுத்துக் கொள்ளும் பலவித மாத்திரைகளும் உடலின் நோய் எதிர்பாற்றலை குறைக்ககூடும்.குறைவான சத்துணவும் ஒரு காரணம். இதனால்தான் தொற்று நோய்கள் எளிதில் முதியவர்களை பாதிக்கிறது.
நோய் ஏதிர்ப்புச் சக்தியை எப்படி அதிகரிப்பது?
சத்தான உணவுடன், முக்கியமாக உடல் ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, பாதாம், கொட்டை வகைகள் போன்ற உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேறு ஏதேனும் வழிமுறை உண்டா?
முடியும். சில தடுப்பு ஊசிகளின் மூலமும் உடல் நோயின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, சில தொற்று நோய்களை வராமலேயே தடுத்துக் கொள்ள முடியும்.
என்னென்ன நோய்களுக்கு தடுப்பு ஊசி இருக்கிறது?
ஃப்ளூ காய்ச்சல் – மழை காலங்களில் (செப்டம்பர் முதல் ஜனவரி வரை) இந்நோய் வரும். இதற்கு அக்காலங்களில் வருடத்திற்கு ஒரு ஊசி போட்டுக் கொள்ளலாம்.
நிமோனியா சளி – இது இருமல், சளியோடு உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் ஒரு தொற்று நோய். ஐம்பது வயதிற்கு பின்பு, ஒரே ஒரு முறை இந்த ஊசியை போட்டுக் கொண்டால் போதும். சிலருக்கு மட்டும் ஐந்து ஆண்டுகள் கழித்து இரண்டாவது ஊசி தேவைப்படும். இந்த தடுப்பு ஊசிகளினால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை.
டைபாய்டு காய்ச்சலுக்கு 3 வருடத்திற்கு ஒரு முறை ஒரு ஊசி மட்டும் போட்டால் போதும்.
மஞ்சள் காமாலை – முதுமையில் ஓரு குறிப்பிட்ட சிலருக்கே தேவைப்படும்