Flash World

விரைவில் வேற்று கிரகவாசிகளை பார்க்க முடியும் நாசா விஞ்ஞானிகள் தகவல்

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிர்கள் வசித்து வருகின்றன. இதைப்போல வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளனவா? என்ற கேள்வி மனிதர்கள் மட்டுமின்றி விஞ்ஞானிகள் மத்தியிலும் நிலவுகிறது.

ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாக அடிக்கடி செய்திகள் உலா வரும் நிலையில், இது தொடர்பான ஆய்வில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். நீண்டகாலமாக ஆய்வு செய்து வரும் அவர்கள், 2025–ம் ஆண்டுக்குள் வேற்று கிரகவாசிகளை கண்டுபிடிக்க முடியும் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய நாசா தலைமை விஞ்ஞானி எல்லன் ஸ்டோபன் கூறுகையில்,

‘பூமிக்கு அப்பால் உயிர்கள் வாழ்வது தொடர்பான வலுவான அடையாளங்களை இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நாம் பெற முடியும் என நான் நினைக்கிறேன். அந்தவகையில் 20 முதல் 30 ஆண்டுகளுக்குள் இது தொடர்பான வலுவான ஆதாரங்களை நாம் கண்டுபிடிக்க முடியும்’ என்று கூறினார்.