World

தென்னாப்பிரிக்கா: போட்ஸ்வானா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ஜிம்பாப்வே குலுங்கியது

கபரோன்:

போட்ஸ்வாம்னா நாட்டின் தலைநகரான கபரோனில் இருந்து வடமேற்கே சுமார் 238 கிலோமீட்டர் தூரத்தில், பூமிக்கு அடியில் 11 கிலோமீட்டர் அளவில் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு 7.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 30 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் அருகாமையில் உள்ள ஜிம்பாப்வே, ஸ்வாசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் குலுங்கியதாக தென்னாப்பிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நிலநடுக்கத்தின்போது வீட்டில் இருந்த கட்டில் அதிர்ந்ததாகவும் இதனால் பீதியடைந்து வீட்டில் இருந்து வெளியே ஓடியதாகவும் டர்பன் நகரவாசி ஒருவர் கூறும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலநடுக்கத்தால் உண்டான உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில், அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.