Science

செவ்வாய் கிரகத்தில் இக்ளூஸ் வீடு: உரைந்த தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படும் ஐஸ் வீடு

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் ஒரு நாள் கண்டிப்பாக இக்ளூஸ் (igloos) வீடுகளில் தான் வாழ்வார்கள். எஸ்கிமோக்களின் குடிசை போன்று காட்சியளிக்கும் ஐஸ் வீடுகள், விண்வெளியின் உள்ள கதிர்வீச்சில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, செவ்வாய் கிரகத்தின் அடியில் இருந்து எடுக்கப்படும் ஐஸ்-சை வைத்து மேற்பரப்பில் உருவாக்க உள்ளனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள் விண்வெளியில் வாழ்வதற்கு பூமியில் இருந்து பொருட்களை எடுத்து செல்லாமல், செவ்வாய் கிரகத்தின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைத்துக்கொள்ளலாம். கடந்த மாதத்தில் ஆராய்ச்சியாளர்கள், செவ்வாய் கிரகத்தின் கீழ்ப்பரப்பில் தண்ணீர் அதிகமாக உள்ள ஒரு பெரிய ஏரி உரைந்து காணப்படுவதாக கூறியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் வீடு வடிவமைப்பு மக்களுக்கு ஒரு கவசம் போல் திகழ்வதாக ஏன் கூறப்படுகிறது என்றால், கடுமையான விண்வெளி கதிர்வீச்சில் இருந்து மனிதர்களை காப்பாற்றி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதால் தான். இந்த வீடுகள், வேலை, தூக்கம், பொழுதுபோக்கு, உணவு தயாரித்தல் மற்றும் கிரீன்ஹவுஸ் உட்பட பலவற்றிற்கும் இது உபயோகப்படும். ஒவ்வொரு வீடுகளும் 4 பேர் தங்குவதற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் ஒரு சதுர அங்குலத்தில், 14.7 lbs காற்று அழுத்தத்தை கொண்டிருக்கும். மேலும் மனிதனுக்கு தேவையான 72 டிகிரி பாரன்ஹீட் (22 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையையும் கொண்டிருக்கும். 3D-அச்சிடப்பட்ட பல கட்டமைப்புக்கள், பார்ப்பதற்கு அழகாக தான் இருக்கும், ஆனால் அது தேவையான காற்றழுத்தத்தை வைத்திருக்க முடியாது என்று திரு கெம்டன் கூறியுள்ளார். அதனால் நீங்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கு அழகான வடிவமைப்பும், குறைந்த காற்றழுத்தமும் போதுமானதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அறைகளின் வெளிப்புறத்தை சுற்றி கசியும் பைகளை நிரப்ப பனி நீர் பயன்படுத்தப்படும், மேலும் செவ்வாயின் காற்று மண்டலத்தில் இருந்து பெறப்படும் கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்தி பனி வீட்டின் உள்புறத்தில் இருக்கும் போது நமக்கு பாதுகாப்பு வழங்க செல்லுலார் அடுக்குகளை கொண்டுள்ளது. இயற்கை ஒளி மூலம் கசியும் பனி பிரகாசிப்பதால் நம் குடியிருப்புகள் இருளில் மூழ்காமல் பிரகாசமாக இருக்கும். ஒரு வலிமையான கதிர்வீச்சு குடியிருப்புக்குளுள் வராமல் இருப்பதற்காக, குடியிருப்பின் மேல் பகுதியில் பாதுகாப்புக்காக ஒரு  தடிமனான அடுக்கு வழங்கப்படவுள்ளன. இதனால் மக்கள் கதிர்வீச்சில் இருந்து பாதிக்காமல் ஆரோக்கியமாக செவ்வாய் கிரகத்தில் வாழலாம்.