நோவாவுக்கு வயது 12 தம்பி தங்கை இரண்டுபேரும் குடீஸ் ஆக இருந்தார்கள் எல்லா அமெரிக்கர்களை போலவே நோவாவின் அம்மாவும் வேலைக்கு போனார்கள். குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாராவது கிடைபர்களா என்று தேடினார்கள். இரண்டு பேர் வேலைக்கு கிடைத்தனர். ஆனாலும் அவர்கள் நல்ல முறையில் குழந்தைகளை கவனித்து கொள்ள வில்லை , இருப்பினும் அதிக அளவு சம்பளம் மட்டுமே கேட்டு வாங்கினர்.
இதை கவனித்த நோவா ஒரு நல்ல பணியாளை தேடி பிடித்து தனது தம்பி தங்கையை கவனித்து கொள்ளும் படி செய்தார்.. அதுவும் நல்ல படியாக அமைந்தது.. அக்கம்பக்கம் உள்ளவர்களும் தங்களது குழந்தைகளை கவனித்து கொள்ள இதை போல் ஒருவரை ஏற்பாடு செய்து தரும் படி நோவாவை வேண்டினர்.
அவரும் அனைவர்க்கும் ஒரு பணியாளரை நியமித்து கொடுத்தார் . ஒரு குறிப்பிட்ட தொகை அவருக்கு வழங்க பட்டது . இப்படி செய்தால் கூட சம்பாதிக்கலாம் என்பதை நோவா தெரிந்து கொண்டார்.
உடனே “nannies by nova” என்று ஒரு கம்பெனி ஐ தொடங்கினர். இப்பொது நோவாக்கு 200 வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு குழந்தை ஐ கவனித்து கொள்ள 5 டாலர் வாங்குகிறார். நம்ம ரூபாய்க்கு 300 rs . கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் பணிக்கு செல்லும் பெற்றோர்கள் இதை கொடுபதற்கு தயங்குவதில்லை .
கம்பெனி தொடங்கிய 3 ஆண்டுகளில் நோவா சுமார் 3 கோடி சம்பாதித்து விட்டார்.
“கை தொழில் ஒன்றை கற்று கொள் ” என்று சும்மாவா சொன்னங்க…