தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழ் மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் அதேநேரத்தில், தெலுங்கு, மலையாளம், அஸ்ஸாமி, பஞ்சாபி புத்தாண்டுக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்து செய்தியில் “தமிழ், தெலுங்கு, மலையாளம், அஸ்ஸாமி, பஞ்சாபி புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் இந்த நல்ல தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
நாட்டின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படும் இந்த விழாக்கள் நம் நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களையும் அதில் கலந்திருக்கும் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்தப் புத்தாண்டு விழாக்கள் நம் நாட்டின் பன்முகத் தன்மை உடைய பாரம்பரியத்தை வலுப்படுத்தி, நம் வாழ்க்கையில் நம்பிக்கையை கொண்டு வரட்டும்” என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்