சென்னை : சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் தொடர்புடைய இடங்களில் 5 நாட்கள் சோதனை நடத்திய வருமான வரித்துறை, அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்க உள்ளது. சசிகலாவின் சகோதரன் பூங்குன்றன், விவேக் மைத்துனன் பிரவீன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகின்றனர்.
ஐந்து நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1200 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் வருமான வரித்துறையின் கைக்களுக்கு கிடைத்துள்ளன. இது மட்டுமல்லாமல் சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளும் கிடைத்திருக்கின்றன. வெளிநாடுகளில் நூற்றுக்கணக்கான கோடி ருபாய் முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய புள்ளியாக இருந்த இளவரசியின் மகன் விவேக்கிடம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.அந்த கேள்விகளுக்கு விவேக் பதில் சொல்ல முடியாமல் திணறி இருக்கிறார்.மேலும் விவேக் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திவாகரன் ஆஜராகி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் விவேக்கின் மைத்துனர் அண்ணா நகரில் உள்ள பிரவீன் என்பவரும் இன்று ஆஜராக இருக்கிறார்.கிருஷ்ணாப்பிரியா மற்றும் ஷகிலா ஆகிய இரண்டு சகோதரிகளும் கூட இன்று ஆஜராக உள்ளனர் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது.