அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்தை வரவேற்கிறேன் என தம்பிதுரை எம்.பி கூறி உள்ளார்.
சென்னை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தம்பிதுரை எம்பி இன்று இரண்டாவது முறை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அ.திமு.க கட்சியில் பிளவும் இல்லை அணிகளும் இல்லை. தற்காலிகமாகத்தான் இரட்டை இலை சின்னம் முடகப்பட்டது. நிரந்தரமாக அல்ல. வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஆம்மா ஆட்சி நடந்திட பாடுபடவேண்டும்.ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம்.
முதல் அமைச்சரை தொகுதி பிரச்சினை தொடர்பாக சந்தித்தேன்.ஆட்சியை தொடர்ந்திட எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர்.புரட்சி தலைஅவர் ஏற்படுத்திய இந்த கட்சி ஒன்றுமையாக இருக்க வேண்டும்.
அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்தை வரவேற்கிறேன்.ஒற்றுமையாக இருக்க ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவரும் இரட்டை இஒலையில் நின்று வெற்றி பெற்றவர்தான். நானும் இரட்டைஇலையில் நின்று வெற்றிபெற்றவனதான்.ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.